செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே செங்குன்றம் வரதராஜன் தெருவை சேர்ந்தவர் அசோக். பி.காம் படித்த இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர், கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த பெண் ஒருவருடன் பேசி வந்தார். இந்த நிலையில், இவருடைய தோழி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அசோக் சோகத்திலேயே இருந்து வந்துள்ளார்.
நாளடைவில், துக்கம் தாங்கமுடியாமல் இருந்து வந்த அசோக், நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக்கை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.