தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றக் கோரி சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இது தொடர்பான ஆவணத்தை சங்கரன்கோயில் வட்டாட்சியர் பாபு சரிபார்த்து உள்ளார். இந்த ஆவண சரிபார்ப்பின் இப்போது விஜயலட்சுமி அளித்த வாரிசு சான்றிதழிலில் இருந்த அரசாங்க முத்திரை போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சங்கரன்கோவில் வட்டாட்சியர் பாபு விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக விஜயலட்சுமி பதில் அளித்ததால் அவரை சங்கரன்கோயில் காவல் நிலையத்தில் அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும் போலீ சான்றிதழ் தயாரித்தது குறித்து விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தந்தையின் சொத்திற்காக போலீ சான்றிதழ் தயாரித்த சம்பவம் சங்கரன்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.