துருக்கியில் இடிபாடுகளுக்குள் புதைந்து போன பெண்: வளர்ப்பு நாயால் 105 மணி நேரத்திற்கு பின் நடந்த அதிசயம்


துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கத்தை அடுத்து, வளர்ப்பு நாயால் 105 மணி நேரத்திற்கு பின்னர் அதன் உரிமையாளர் மீட்கப்பட்டுள்ளார்.

புதைந்து போயிருந்த பெண்மணி

துருக்கியின் அந்தாக்யா பகுதியில் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்து போயிருந்தார் Duygu என்ற பெண்மணி.
இந்த நிலையில் அவரது வளர்ப்பு நாய் காரணமாக 105 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

துருக்கியில் இடிபாடுகளுக்குள் புதைந்து போன பெண்: வளர்ப்பு நாயால் 105 மணி நேரத்திற்கு பின் நடந்த அதிசயம் | Buried Under Rubble Dog Leads Rescuers To Owner

Picture: Anadolu

பனை மரங்கள், பொட்டிக்குகள் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் என காணப்பட்ட முக்கிய தெருக்கள், ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கத்தால், சில நொடிகளில் சிதைந்துபோயுள்ளது.

25,000 கடந்துள்ள இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியை மொத்தமாக சிதைத்துள்ள இந்த நிலநடுக்கத்தில் மிக மோசமாக பாதித்த பகுதிகளில் ஒன்று அந்தாக்யா.

துருக்கியில் இடிபாடுகளுக்குள் புதைந்து போன பெண்: வளர்ப்பு நாயால் 105 மணி நேரத்திற்கு பின் நடந்த அதிசயம் | Buried Under Rubble Dog Leads Rescuers To Owner

@getty

தெருக்களில் வசிக்கும் நிலை

சுமார் 20,000 மக்கள் வசித்துவந்த இப்பகுதியானது தற்போது தரைமட்டமாகியுள்ளது. மக்கள் தற்போது வீடற்றவராகியுள்ளதுடன், கடும் குளிரில் தெருக்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில், உள்ளூர் மீட்புக் குழுவினர் அல்லது அமெரிக்கா, பிரித்தானியா, கனடா அல்லது உக்ரைன் குழுவினரால் இன்று அதிகமாக சடலங்களை மட்டுமே மீட்க முடிந்ததாக கூறப்படுகிரது.

துருக்கியில் இடிபாடுகளுக்குள் புதைந்து போன பெண்: வளர்ப்பு நாயால் 105 மணி நேரத்திற்கு பின் நடந்த அதிசயம் | Buried Under Rubble Dog Leads Rescuers To Owner

@AFP

துருக்கியில் மட்டும் 110,000 மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பேரிடருக்கு பின்னர் மூன்று நாட்களில் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துவிடும், ஆனால் துருக்கியில் நான்கு நாட்கள் கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறியுள்ளதாகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.