துருக்கியில் முகம் சிதைந்து கோரமாக மீட்கப்பட்ட இந்தியர்: குடும்பத்தினருக்கு அடையாளம் காட்டிய அந்த டாட்டூ

திங்கட்கிழமை ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து மாயமானதாக கூறப்பட்ட இந்தியரின் சடலம் ஐந்து நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்

குறித்த தகவலை இந்திய தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாகாணத்தை சேர்ந்த விஜய குமார் என்பவரே துருக்கியில் தொழில்முறை பயணமாக சென்றுள்ளார்.

துருக்கியில் முகம் சிதைந்து கோரமாக மீட்கப்பட்ட இந்தியர்: குடும்பத்தினருக்கு அடையாளம் காட்டிய அந்த டாட்டூ | Indian Man Found Under Destroyed Hotel In Turkey

@reuters

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட Malatya பகுதியில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவரை, கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.
அவரது முகம் மொத்தமாக சிதைந்து போயிருந்ததால்,

முதலில் அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆனால் ஓம் என கையில் பச்சை குத்தியிருந்ததை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் முகம் சிதைந்து கோரமாக மீட்கப்பட்ட இந்தியர்: குடும்பத்தினருக்கு அடையாளம் காட்டிய அந்த டாட்டூ | Indian Man Found Under Destroyed Hotel In Turkey

@reuters

மேலும், அவரது உடமைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது சடலத்தை இந்தியா கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பலியானவர்கள் எண்ணிக்கை 25,000 

துருக்கியில் சுமார் 3,000 இந்தியர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இஸ்தான்புல் நகரில் மட்டும் 1,800 பேர்கள் வசிக்கின்றனர். அங்காரா பகுதியில் சுமார் 250 பேர்கள் எனவும், எஞ்சியவர்கள் துருக்கியின் பல பகுதிகளில் வசிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துருக்கியில் முகம் சிதைந்து கோரமாக மீட்கப்பட்ட இந்தியர்: குடும்பத்தினருக்கு அடையாளம் காட்டிய அந்த டாட்டூ | Indian Man Found Under Destroyed Hotel In Turkey

@reuters

இதனிடையே, துருக்கி நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 25,000 கடந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 32,000 துருக்கிய தன்னார்வலர்கள் இரவு பகலின்றி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சர்வதேச அமைப்புகளை சேர்ந்த 8,294 பேர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

துருக்கியில் 1939ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 33,000 மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் முகம் சிதைந்து கோரமாக மீட்கப்பட்ட இந்தியர்: குடும்பத்தினருக்கு அடையாளம் காட்டிய அந்த டாட்டூ | Indian Man Found Under Destroyed Hotel In Turkey

@reuters

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.