பயணிகள் பேருந்தின் மீது கோதி விபத்துக்குள்ளான விமானம்: அமெரிக்காவில் சம்பவம்


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விமான நிலையத்தில் பயணிகளுக்கான பேருந்து ஒன்றின் மீது விமானம் மோதிய விபத்தில் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து மீது மோதிய விமானம்

குறித்த பயணிகள் விமானமானது பார்க்கிங் பகுதிக்கு நகர்த்தப்பட்ட நிலையிலேயே பேருந்து மீது மோதியுள்ளது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் ஐவர் காயங்களுடன் தப்பியதில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் பேருந்தின் மீது கோதி விபத்துக்குள்ளான விமானம்: அமெரிக்காவில் சம்பவம் | American Airlines Plane Struck A Passenger Bus

@abc7

குறித்த தகவலை விமான நிலைய அதிகாரிகளே தங்கள் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
பேருந்தின் சாரதி, இரு பயணிகள், மற்றும் இன்னொரு சாரதி என நால்வர் மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் ஆபத்தான காயங்கள் இல்லை என்றே கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானம் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விபத்து தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த மாதம் மணிக்கு 115 மைல் வேகத்தில் கிளம்பிய டெல்டா விமானத்தின் மீது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மோதவிருந்தது, கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது.

விமானம் மீது மோதவிருந்த விமானம்

நியூயார்க் விமான நிலையத்தில் இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெல்டா விமானமானது அப்போது மணிக்கு 115 மைல் வேகத்தில் ஓடுதளத்தில் இருந்து கிளம்பியிருந்தது.

பயணிகள் பேருந்தின் மீது கோதி விபத்துக்குள்ளான விமானம்: அமெரிக்காவில் சம்பவம் | American Airlines Plane Struck A Passenger Bus

@abc7

இந்த நிலையில், லண்டன் செல்லவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்னொரு ஓடுதளத்தில் இருந்து திரும்பியுள்ளது.
இதை அதிகாரி ஒருவர் கவனித்து, உடனடியாக தகவல் அளித்துள்ளார்.

இதனால் பெரும் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
மட்டுமின்றி, டெல்டா விமானமானது அடுத்த நாள் பகல் வரையில் புறப்படவில்லை எனவும், ஆனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சரியான நேரத்தில் லண்டன் சென்றடைந்ததாகவும் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.