லண்டன்: பிரிட்டனில் இரண்டாம் உலக போர் கால வெடிகுண்டை செயலிழக்க செய்த போது திடீரென வெடித்த சம்பவம் நடந்தது.
பிரிட்டின் கிழக்கு மாகாணத்தில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அப்போது பள்ளம் தோண்டிய போது 3 அடிநீள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்துள்ளது தெரியவந்தது.
அதனை செயலழிக்க செய்ய நிபுணர்கள் பத்திரமாக செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த போது எதிர்பாரதவிதமாக வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். குண்டு வெடித்து சிதறும் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement