பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கும் விடுதி முன்பு வெடித்த கலவரம் தொடர்பில் 13 வயது சிறுவன் உட்பட 15 பேர்கள் கைதாகியுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 6.30 மணியளவில் Suites ஹொட்டல் முன்பு அமைதியான முறையில் இரு தரப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திடீரென்று அப்பகுதியில் நுழைந்த குழு ஒன்று கலவரத்தை தூண்டியுள்ளனர்.
@Liverpool Echo
அவர்கள் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களும் வைத்திருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, பொலிஸ் வாகனத்திற்கும் அவர்கள் நெருப்பு வைத்துள்ளனர்.
இந்த களேபரத்தில் பொதுமக்களில் இருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டவே, அந்த வன்முறை குழு அப்பகுதியில் நுழைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@LNP
மொத்தம் 15 பேர்கள் கைது
இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் 13 வயது சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 15 பேர்கள் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@PA