மும்பை : மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, ‘வெல்ஸ்பன்’ குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா என்பவர் 240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் தொழிலதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலமானது. ஓபராய் ரியால்டி குழுமத்தால் இரு ‘டவர்’ களாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தில், டவர் பி — யில் உள்ள 63, 64, 65 ஆகிய மூன்று தளங்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மொத்தம், 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மூன்று தளங்களையும், வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா, 240 கோடி ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கியுள்ளார்.இதன் வாயிலாக, நாட்டிலேயே அதிக விலைக்கு விற்பனையான அடுக்குமாடி குடியிருப்பு என்ற பெருமையை இது பெற்று உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement