திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஷக்கீல். இவருடைய மனைவி சித்திகா பர்வீனுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ள நிலையில் குளிப்பதற்காக வீட்டின் குளியல் அறையில் இருந்த வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார்.
அப்பொழுது சித்திகா பர்வீன் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட சித்திகா பர்வீன் குளியல் அறையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட உறவினர்கள் சித்திகா பர்வீனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்பொழுது வழியிலேயே சித்திகா பர்வீன் உயிரிழந்துள்ளார்.
ஷக்கில் மற்றும் சித்திகா பர்வீன் தம்பதியினருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ள நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.