12 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் விடுமுறையை எடுக்காமல் பணி செய்து அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் கீழ சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் கலையரசன்.
இவர் கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. காலையில் 9:00 மணிக்கு பள்ளிக்கு செல்லும் இவர் மாணவர்களை ஒழுங்குப்படுத்தி நற்பண்புகளை கற்றுத் தருகிறார்.
மேலும், விடுமுறை நாட்களில் கூட பணி செய்து மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களை முறையாக வழங்கி வருகிறார்.12 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் ஆசிரியருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.