Hansika Motwani: தோழியின் கணவரை அபகரித்தேனா? கண்ணீர்விட்ட ஹன்சிகா மோத்வானி!

சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய தான்தான் காரணம் என பரவிய தகவல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஹன்சிகா மோத்வானிபாலிவுட் நடிகையான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த ஹன்சிகா மோத்வானி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தனது தொழில் பார்ட்னரும் தனது தோழியின் முன்னாள் கணவருமான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் வெகு விமரிசையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
​ Sneha: வேற லெவல்… சினேகாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து வாயை பிளக்கும் ரசிகாஸ்!​
ஹன்சிகா திருமணம்ஹன்சிகாவுக்கு திருமணம் என்றதுமே அவரது வருங்கால கணவர் யார்? என்ன செய்கிறார் என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. ஹன்சிகா திருமணம் செய்துள்ள சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தோழியின் திருமணத்தில் ஹன்சிகா பங்கேற்றிருந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.
​ Vijay, Sharukh khan, Shankar: நிஜமாவா? விஜய்.. ஷாருக் கான்.. ஷங்கர்… 900 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டம்!​
தோழியின் கணவர்மேலும் தோழியின் கணவரையே ஹன்சிகா அபகரித்து விட்டார் என்றும் சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் காரணம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகா சோஹேல் திருமண வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே விவாகரத்தான நபரை திருமணம் செய்தது ஏன் என பேசியிருந்தார் ஹன்சிகா மோத்வானி.
​ AK 62, Vignesh Shivan: கையிலேயே வெண்ணெய் இருக்கு… விக்னேஷ் சிவனின் அதிரடி திட்டம்!​
சிம்புடன் காதல்மேலும் சிம்புவுடனான தனது கடந்த கால ரிலேஷன்ஷிப் குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோவில் மேலும் பல தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஆவேசமாகவும் கண்ணீர் மல்கவும் பேசியுள்ளார் ஹன்சிகா மோத்வானி. அந்த வீடியோவில் திருமணம் நடைபெற்ற அரண்மனையின் அலங்காரம், மஞ்சள் சடங்கு, மெஹந்தி, சங்கீத், பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு, திருமண உடைகள், மேக்கப், திருமணம் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.
​ Leo: ஒரு வேளை அப்படி இருக்குமோ? திடீரென லியோ படத்திற்கு விளம்பரம் செய்த பிரபல நடிகர்!​
மன வேதனைஇதில் பேசியுள்ள ஹன்சிகா மோத்வானி, தங்களின் நிச்சயதார்த்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்த பிறகு பலர் வாழ்த்து தெரிவித்ததாகவும் பலர், சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு காரணம் தான்தான் என்று கூறியதாலும் மிகுந்த மன வேதனைக்கு ஆளானதாக கூறியுள்ளார். தனது திருமணம் குறித்து கன்னாபின்னவென தகவல்கள் வந்தததாகவும் தோழியின் கணவரை அபகரித்துக் கொண்டதாகவும் வெளியான தகவல்கள் தன்னை ரொம்பவே காயப்படுத்தியதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். ​ Dada: அப்படியே அந்ந படத்தோட அட்ட காப்பி… டாடா படத்தை கழுவி ஊற்றிய ப்ளுசட்டை மாறன்!​
ஹன்சிகா கண்ணீர்இந்த செய்திகளால் தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அப்போதெல்லாம் சோஹேல்தான் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி. சோஹேலின் கடந்த காலத்தை பற்றி தனக்கு கவலையில்லை என்றும், இருவரும் ஒருவரை ஒருவர் மனதார ஏற்றுக்கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார். தாங்களும் மனிதர்கள்தான் என்று கூறியுள்ள ஹன்சிகா மோத்வானி, கையில் பேனா கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதி விடலாமா என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
​ Rachitha Mahalakshmi: மறக்க முடியாத நாள்.. கதறல் போட்டோவை வெளியிட்ட பிக்பாஸ் ரச்சிதா.. தேற்றும் ரசிகாஸ்!​
Hansika Motwani

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.