ஆசிரியர்கள் பணி நிரவல்; பள்ளிக்கல்வித்துறை ஹேப்பி நியூஸ்..!

அரசு உதவி பெரும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பணிநிரவலை நிறுத்திவைக்கக்கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ளதாவது; ”தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணிநிரவல் செய்யும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அரசு வகுத்துள்ள விதிகளின்படி பணிநிரவல் நடைமுறையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசுப் பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது வரவேற்கத்தக்கது. எனினும், கல்வியாண்டின் இடையில் பணியிட மாறுதலை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு பணிநிரவல் செய்யும் நடைமுறையை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் உடனே நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டின் தொடக்கமான ஜூனில் உபரி ஆசிரியர்களுக்கான இந்தப் பணியிட மாறுதலை முறையாக மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 2023 ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் கேட்டால், ‘நிதி இல்லை’ என்று சொல்வார்களே தவிர அவர்களிடம் நிலையான பதில் இல்லை என்று ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும், நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் உள்ள இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட தமிழக அரசை கண்டித்து திடீர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கலாம் என்று அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரத்தில் ஒரு தகவல் வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.