இடதுசாரிகள் வீழ்ந்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ். மையங்களாகும் ஆளுநர் மாளிகை – டி.ராஜா

கோவை மாவட்ட சி.பி.ஐ அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும், ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவர் கூறியது; ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் சனாதன கருத்துகள் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும், மாநிலத்திற்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றினைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதசார்பற்ற கட்சி என்பது நிராகரிக்க முடியாது என்றும், கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதை கடந்து ஆர்.எஸ்.எஸ்.சை, பாஜகவை வீழ்த்த ஒன்றினைந்து நாட்டை காக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றவர், பாஜக ஆட்சியை பிடித்தவுடன், இடதுசாரிகள் வீழ்ந்து வருவது என்பதை தான் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டவர், அரசியல் கொள்கையில் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிப்பதனால் தான் சமீபத்தில் பிரதமர் கம்யூனிசம் என்பது அபாயகரமான சிந்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும் என்று சொன்னதை குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ்., சிந்தாந்ததற்கு நேரெதிராக இடதுசாரிகள் சிந்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக டி.ராஜாவை தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து அவர் மத நல்லிணக்கம் தொடர்பாக தாம் செய்த சமூக பணிகள் குறித்தும் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.