இரட்டை முக பைரவர், சிவகங்கை மாவட்டம், பெரிச்சிகோயிலில் அமைந்துள்ளது. ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட பைரவரை ஒருமுகத்துடன்தான் தரிசிக்க முடியும். ஆனால், முன்னும் பின்னுமாக இரண்டு முகங்களுடன் காட்சி தரும் கோயிலை அஷ்ட பைரவத்தலங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயிலில் காணலாம். இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் […]
