உக்ரைன் தேசிய பாதுகாப்புப்படை உயர் அதிகாரியை அதிரடியாக நீக்கிய ஜெலென்ஸ்கி


ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புப்படையின் துணைத் தளபதியை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.

உயர் அதிகாரி பணி நீக்கம்

உக்ரைனில் ஊழல் தொடர்பில் சமீபத்திய வாரங்களில் டசன் கணக்கான அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தேசிய பாதுகாப்புப்படையின் துணைத் தளபதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய சுருக்கமான ஆணையின்படி, தேசிய பாதுகாப்புப்படையின் துணைத் தளபதி ரஸ்லன் டிஜூபாவை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ஜெலென்ஸ்கி/Zelensky

@AFP

ஜெலென்ஸ்கியின் உரை

இதற்கிடையில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட தினசரி வீடியோவில், ‘இந்த நடவடிக்கைள் அனைத்தும் குறிப்பிட்ட அத்தியாயங்கள் அல்லது குற்ற நடவடிக்கைகளைப் பற்றியது மட்டுமல்ல.

அரசு நிறுவனங்களைத் தொடர்ந்து நவீனமயமாக்கும். மாநில கட்டமைப்புகளின் பணியின் தூய்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என தெரிவித்தார். 

ஜெலென்ஸ்கி/Zelensky



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.