ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலூக்காக அமைக்கப்பட்டுள்ள அதிமுக பணிமனையில் உள்ள பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ., கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
பல்வேறுகட்ட சிக்கல்களுக்கு பின் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னம் அவருக்கு வழங்ப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொண்டாகியுள்ளனர்.
இந்நிலையில், பெருந்துறை சாலையில், அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள அதிமுக தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டபோது, அதிமுக தலைமையிலான கூட்டணி என்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இது சர்ச்சையாகவே, பின்னர் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று வைக்கப்பட்டு, அன்று மாலையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று மாற்றி பேனர் வைக்கப்பட்டது.
மறுநாள் அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் என்று அச்சிடப்பட்ட புதிய பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனர் விவகாரம் அதிமுக-பாஜக இடையே மோதல் உள்ளதை காட்டுவதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பணிமனையில் உள்ள பேனரை மாற்றப்பட்டுள்ளது. அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி, ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரது படங்களும், கூடுதலாக பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படங்கள் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.