மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் சவுத் டிவிஷனில் புண்ணியவேலின் மளிகை கடையை காட்டு யானை கூட்டம் உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் பொருட்களை சேதப்படுத்தின. அங்கு மளிகை கடை நடத்தி வரும் புண்ணியவேலு கடையுடன் சேர்ந்து உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு வந்த இரண்டு குட்டிகள் உள்பட ஐந்து காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அரிசி, சீனி மூடைகள், காய்கறி, மளிகை பொருட்கள் என ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தின. அங்கு மூன்று மணி நேரம் காட்டு யானை கூட்டம் முகாமிட்டதால் புண்ணியவேலுவின் குடும்பத்தினர் தூக்கத்தை இழந்து அச்சத்தில் உறைந்தனர்.
கடந்த பத்து ஆண்டுகளின் புண்ணிய வேலுவின் கடை, வீடு ஆகியவற்றை 16வது முறை காட்டு யானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதற்கு இழப்பீட்டு தொகை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என புண்ணியவேலு வருத்தத்துடன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement