தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.
காதலர் தினம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த ஒருவருக்கு ஒருவர் வழங்கிக் கொள்வது பூக்களை மட்டும் தான் அதில் முக்கிய இடம் பிடிப்பது ரோஜா பூக்கள்
காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தைக்கு பெங்களூர்,ஓசூர், ஊட்டி கொடைக்கானல் ஆகிய பகுதியிலிருந்து ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன ரோஜா பூக்கள் சிகப்பு மஞ்சள் ஆரஞ்சு ரோஸ் உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் வரவழைக்கப்பட்டுள்ளது மேலும் காரனேசன், ஜெரிபுரா, நிசாந்தம் ஆகிய பூக்களும் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன.
காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதால் குறைந்த அளவான ரோஜா பூக்களே தூத்துக்குடி மலர் சந்தைக்கு வந்துள்ளது இதனால் 15 ரூபாய் விற்பனையான ஒரு ரோஜா பூ தற்போது முப்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது
மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்காக மலர்களால் ஆன பொக்கே தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது ஆன்லைன் மூலம் பொக்கே ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.