சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 18-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வரும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். வரும் 19-ம் தேதி கோவையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவரான பின்னர் திரவுபதி முர்மு முதல்முறையாக தமிழகம் வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.