கோல் கீப்பரிடம் தட்டிப்பறித்து தனியாளாய் கோல் அடித்த வீரர்! தெறிக்கவிட்ட பாயர்ன் முனிச் வீடியோ


பன்டெஸ்லிகா தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் Vfl போச்சும் அணியை வீழ்த்தியது.


தாமஸ் முல்லர் மிரட்டல்

Allianz Arena மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், பாயர்ன் முனிச் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

41வது நிமிடத்தில் சீறிப்பாய்ந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர், பாதி மைதானத்தில் இருந்து தனியாளாக வந்து கோல் கீப்பரிடம் இருந்து பந்தை தட்டிப் பறித்தார்.

பின்னர் எதிரணி சுதாரிப்பதற்குள் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் கோமன் அபாரமாக ஒரு கோல் அடித்தார்.

தடுமாறிய Vfl போச்சும்

Vfl போச்சும் அணியால் பாயர்ன் முனிச்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

73வது நிமிடத்தில் தன்னை தள்ளிவிட்டதால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட செர்கே நார்பி கோல் அடித்தார்.

தாமஸ் முல்லர்/Thomas Muller

@DPA/PICTURE ALLIANCE VIA GETTY IMAGES

தாமஸ் முல்லர்/Thomas Muller

@Peter Kneffel/Ritzau Scanpix

பாயர்ன் முனிச் வெற்றி

கடைசி வரை Vfl போச்சும் கோல் அடிக்காததால், பாயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாயர்ன் முனிச் 43 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.   

கோல் கீப்பரிடம் தட்டிப்பறித்து தனியாளாய் கோல் அடித்த வீரர்! தெறிக்கவிட்ட பாயர்ன் முனிச் வீடியோ | Bayern Munich 3 Win Vs Vfl Bochum

@FCBayernEN 

கோல் கீப்பரிடம் தட்டிப்பறித்து தனியாளாய் கோல் அடித்த வீரர்! தெறிக்கவிட்ட பாயர்ன் முனிச் வீடியோ | Bayern Munich 3 Win Vs Vfl Bochum

@FCBayernEN 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.