சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்ற சுழற்சியை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்வு விண்வெளி சமூகத்தை திகைக்க வைத்துள்ளது. இதன் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இது சூரியனின் வடதுருவத்தின் மேல்பகுதியில் நெருப்பு சூறாவளி போல சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழல் பூமிக்கு என்ன மாதிரியான பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை கடந்த வாரம் விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளரான டாக்டர் தமிதா ஸ்கோவ் ( Dr Tamitha Skov ) ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சூரியன் தனது எரிப்புகளை வெளியிடுகிறது, இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளை பாதிக்கிறது, எனவே விஞ்ஞானிகள் சமீபத்திய விண்வெளி வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

நாசாவின் கூற்றுப்படி, “சூரியனின் முக்கியத்துவம் வாய்ந்த ஓரு பகுதி உடையும் போது, இவ்வளவு பெரிய சுழல் ஏற்படுவதை பார்த்ததில்லை. இந்த பெரிய சுழல் சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளிப்புறமாக விரிவடைந்து பெரியஅளவில் பிரகாசமாக உள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் இந்த நிகழ்வு விஞ்ஞான சமூகத்தை திகைக்க வைக்கிறது” என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.