சொந்த சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்! துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம்


துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் தனது சிறுநீரை தானே குடித்து உயிர் பிழைத்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் மீட்பு – எழும் நம்பிக்கை

பேரழிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். ஒருபுறம், இடிபாடுகளுக்குள் இன்னும் யாரும் உயிருடன் இருக்கமுடியுமா என்ற நம்பிக்கைகள் மங்கி வருகின்றன.

அனால், அதே நேரம், 2 மாதம் குழந்தை கூட 5 நாட்கள் தாக்குப்பிடித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது, இன்னும் பல உயிர்கள் இதேபோல் மீட்கப்படலாம் என நம்பிக்கை அளிக்கிறது.

சொந்த சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்! துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம் | Turkey Quake Drunk Own Urine Teenager SurvivesTwitter/IHA

சொந்த சிறுநீரை குடித்த சிறுவன்

இதனிடையே, துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து 17 வயது சிறுவன் 94 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அவர், உயிர் பிழைத்திருக்க அவரது சொந்த சிறுநீரை குடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட அவர் துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவரது பெயர் அட்னான் முஹம்மத் கோர்குட் (Adnan Muhammet Korkut). பூகம்பம் ஏற்பட்டபோது தனது குடும்ப வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்தார். உயிர்வாழும் திறன்களைப் பயன்படுத்தி, அவர் உடனடியாக கருவிற்குள் இருக்கும் நிலைக்கு (Fetal position) வந்ததாக கூறினார். பின்னர் அவர் மீது இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டார்.

துருக்கி நிலநடுக்கம்: 128 மணிநேரம் கழித்து 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு! 

சொந்த சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்! துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம் | Turkey Quake Drunk Own Urine Teenager SurvivesSky news

அவர் தன்னை வலுவாகவும் உயிருடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரிடம் உணவும் தண்ணீரும் இல்லை. எனவே, அவர் தனது சிறுநீரை குடித்துவிட்டு, பூக்களை சாப்பிட்டுள்ளார்.

அவர் தூங்குவதைத் தடுக்க ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் தனது தொலைபேசியில் அலாரம் அடிக்கும்படி வைத்துள்ளார். ஆனால் இரண்டு நாட்களில் அவரது போனின் பேட்டரி தீர்ந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதே போன்று பல உயிர்கள் அதிசயமாக மீட்கப்பட்டு வருகின்றன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.