Kiara Advani Mangalsutra Rate: கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகர்கள் என கடந்த சில மாதங்களாக பல பிரபலங்கள் புது மணமக்களாக இணையத்தை வலம் வருகின்றனர். அந்த வகையில், நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா – கைரா அத்வானி ஆகியோரின் பிரம்மாண்ட் திருமணம்தான் கடந்த வாரம் பாலிவுட் மட்டுமின்றி அனைத்து வட்டாரங்களிலும் ஹாட் டாப்பிக்காக இருந்தது.
ராஜஸ்தானில் பிரம்மாண்ட அரண்மனையில் அவர்களின் திருமணத்தில், சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்ததாக கூறப்பட்டது. திருமணத்திற்கான அவர்களின் திட்டமிடலும், அலங்காரமும் பாலிவுட் வட்டாரத்தில் புகழப்பட்டது. அதிலும், கைரா அத்வானியின் மாங்கல்யம் பெரும் கவனத்தை பெற்றது. அதிலும், அதன் விலை பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
அவர்களின் திருமணத்திற்காக, பிரபல வடிவமைப்பாளர் சப்யசாச்சியின் அழகான தங்க மாங்கல்யத்தை, கியாரா அணிந்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஜெய்சால்மர் மற்றும் டெல்லி விமான நிலையங்களில் சித்தார்த்துடன் கியாரா காணப்பட்டபோது, அவரின் மாங்கல்யம் அனைவராலும் நெருக்கமாகப் பார்க்கப்பட்டது. தங்க மாங்கல்யத்தின் நடுவில் ஒரு பெரிய வைரம் உள்ளது. அது கருப்பு முத்துகளால் சூழப்பட்டுள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா இந்த மங்களசூத்திரத்திற்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. அவரது மாங்கல்யத்தில் மட்டுமல்ல, கியாராவின் தனித்துவமான தங்கம் மற்றும் வெள்ளி களிர்களும் (கையில் அணியும் தொங்கல் வளையல்) மிகவும் சிறப்பானவை. கியாரா அணிந்திருந்த அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக அவரது நிச்சயதார்த்த மோதிரம். கியாராவின் பெரிய மோதிரத்தைப் பற்றி பேசுகையில், ஜோடி பகிர்ந்து கொண்ட அதிகாரப்பூர்வ புகைப்படம் ஒன்றில் நடிகை அதை வெளிப்படுத்தியிருந்தார். இது ஒரு பெரிய ஓவல் வடிவ வைரத்தை மையத்தில் சிறிய வைரங்களைக் கொண்டுள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் தங்கள் திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் ஒரு சிறப்பு பரிசை ஏற்பாடு செய்தனர். அதில் சில ராஜஸ்தானி இனிப்புகள் மற்றும் அனைத்து விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசாக நம்கீன் ஆகியவை வழங்கப்பட்டது.