துருக்கி நிலநடுக்கம்: 128 மணிநேரம் கழித்து 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு!


துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது.

அதிசய உயிர்பிழைப்புகள்

துர்க்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு 140 மணி நேரத்திற்கும் மேலாக, 28,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த பேரழிவிற்கும் விரக்திக்கு மத்தியில், சில அதிசயமான உயிர்பிழைப்பு கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன

முன்னதாக, இடிபாடுகளுக்கும் பிறந்த குழந்தை, பிறந்து 10 நாளே ஆன குழந்தை, 7 மாத குழந்தை, 13 வயது சிறுமி மற்றும் 27 வயது இளைஞன் என மீட்புப் படையினர் பேரழிவிலும் உயிர்பிழைத்த பலரை இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டனர்.

துருக்கி நிலநடுக்கம்: 128 மணிநேரம் கழித்து 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு! | Turkey Earthquake 2 Month Old Baby 128 Hours

128 மணி நேரத்திற்கு பிறகு

இப்போது, துருக்கியின் Hatay என்ற இடத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று (பிப்ரவரி 11) மீட்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிந்து தரைமட்டமான சுற்றுப்புறங்களில், உறைய வைக்கும் வானிலை இருந்தபோதிலும், உயிருடன் மீட்கப்படுவேம் என்ற நம்பிக்கையில் இடிபாடுகளுக்குள் இன்னும் சவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் உயிர்களை மீட்க கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவர்களில் 2 வயது சிறுமி, 6 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் 70 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை (பிப்ரவரி 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியா முழுவதும் பல சக்திவாய்ந்த பின்னடைவுகளுடன், இந்த நூற்றாண்டில் உலகின் ஏழாவது கொடிய இயற்கை பேரழிவாக உள்ளது, இது 2003-ல் அண்டை நாடான ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்லப்பட்ட 31,000-ஐ நெருங்குகிறது.

துருக்கியில் இதுவரை 24,617 பேர் இறந்துள்ளனர், இது 1939-க்குப் பிறகு நாட்டின் மிக மோசமான நிலநடுக்கம் ஆகும். சிரியாவில் 3,500-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், ஆனால் சிரியாவில் வெள்ளிக்கிழமை முதல் இறப்பு எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.