வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கி பூகம்ப இடிபாட்டில் சிக்கிய 2 மாத கைக்குழந்தை ஒன்று 128 மணி நேரத்திற்கு பிறகு, உயிருடன் மீட்கப்பட்டது.
துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த திங்கட்கிழமை 7.8 ரிகடர் அளவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் நீடிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகள் மீட்பு பணிக்கு உதவி வருகின்றன. ஆயிரகணக்கானோர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இப்பணியில் உள்ளனர்.

இந்நிலையில், ஹடாய் நகரில் 128 மணி நேரத்திற்கு பிறகு 2 மாத பெண் குழந்தையை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் இக்குழந்தையுடன் 6 மாத கர்ப்பிணி மற்றும் 70 வயது மூதாட்டி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement