லிப்ட் படத்துக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் டாடா. அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை தமிழக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை படத்துக்கு வந்த விமர்சனங்களில் பெரும்பாலானோர் படம் சூப்பராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டாடா படம் குறித்து நடிகை அபர்ணா தாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூட, கவின் இந்த படத்துக்கு முடிந்தளவுக்கான கடின உழைப்பை செலுத்தியதாக பாராட்டு தெரிவித்தார். ஒரு நண்பியாக எப்போதும் அவர் பின்னால் இருப்பேன் என்றும் உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் கவினும் டாடா பட வெற்றிக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துள்ள அவர், சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, விஜய் டெலி அவார்ட்ஸில் விருது வென்றபோதும், படம் ஒன்று பிரச்சனையில் சிக்கியபோதும் அவர் நெல்சன் திலீப்குமாரிடம் சென்றதாக தெரிவித்துள்ளார். இரண்டுக்குமே சரி வாடா அடுத்த வேலைக்கு செல்வோம் என கூலாக என்னை கூப்பிட்டார். இதில் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், வெற்றியோ தோல்வியோ இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மனம் எந்த குழப்பமும் அடையாது என புரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இப்போது சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தை வைத்து ஜெய்லர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மல்டி ஸ்டார் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக நெல்சன் திலீப்குமார் கடுமையாக விமர்சனங்களால் துளைத்தெடுக்கப்பட்டார். இது மீண்டும் ஜெய்லரில் நடந்துவிடக்கூடாது என்ற நோகத்தோடு திரைக்கதையை வடிவமைத்து சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.