பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை கும்பல் கொடூரமாக தாக்கியது. இந்தக் கும்பல் நங்கனா சாஹிப் காவல் நிலையத்தைக் கைப்பற்றி, குற்றவாளியை வெளியே இழுத்துச் சென்றது. குற்றம் சாட்டப்பட்டவர் பகிரங்கமாக நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார். அங்கிருந்த போலீசார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குரானை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் வாரிஷ் இசா என்ற 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள நங்கனா சாஹிப்பின் வார்பர்டன் காவல் நிலையத்தை அந்த கும்பல் தாக்கியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து திரும்பிய இவர் மாந்திரீகம் செய்து வந்ததாகக் கூட்டத்தினர் தெரிவித்தனர். மேலும், அவர் தனது முன்னாள் மனைவியின் படத்தை புனித புத்தகங்களில் ஒட்டுவது வழக்கமாக கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் இழுத்துச் சென்று அடித்துக் கொன்றனர்

வீடியோவில், காவல் நிலைய வாயிலில் மக்கள் தடி, கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் கூடியிருப்பதைக் காணலாம். சிலர் கேட்டை ஏற முயல்கிறார்கள், சிலர் கட்டையால் கதவினை அடிக்கிறார்கள். இரண்டாவது வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் கால்களைப் பிடித்து சாலையில் இழுத்துச் சென்று நிர்வாணமாகத் தாக்கியதைக் காணலாம்.

பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துமாறு பஞ்சாப் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இதற்கு முன்பும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மேலும் படிக்க | உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்… PoK பகுதியில் தீவிரமடையும் போராட்டம்!

இஸ்லாமியர்கள்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அடிக்கடி மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இதுபோன்ற கொலைகளைத் தடுக்க பாகிஸ்தான் அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச உரிமைக் குழுக்கள் நீண்டகாலமாக விமர்சித்து வருகின்றன.

பாகிஸ்தானிய சட்டத்தின்படி மத நிந்தனை குற்றத்ட்திற்கு மரண தண்டனை விதிக்கலாம். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு, மத நிந்தனை குற்றச்சாட்டிற்காக இலங்கை நாட்டைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை மேலாளர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார். அவரை கொன்ற குற்றத்திற்காக ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விஷயம் தேசிய மற்றும் உலகளாவிய சீற்றத்தைத் தூண்டிய நிலையில், தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மற்ற வழக்குகளுக்கு எதிராக அரிதாகவே இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பலை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பல காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பெஷாவரில் மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதல்! 27 பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.