திருவனந்தபுரம்: ராகுல்காந்தி எம்பி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ நடை பயணத்தை தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட மாநிலங்கள் வழியாக 3,500 கிமீக்கு மேல் நடந்து கடந்த மாதம் 26ம் தேதி காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்தார்.
இந்தநிலையில் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தி இன்று முதன் முறையாக கேரளா வருகிறார். இரவு 8 மணிக்கு விமானம் மூலம் கோழிக்கோடு வரும் அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து நாளை (13ம் தேதி) காலை வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டேரி பகுதியில் காங்கிரஸ் சார்பில் கட்டிக் கொடுக்கப்படும் இலவச வீடுகளை அவர் பார்வையிடுகிறார். பிறகு வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மாலையில் மீனங்காடி பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.