வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி குறித்து விவாதிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.
![]() |
இந்த கூட்டம் நடந்து முடிந்த உடனேயே, புடின் மற்ற அனைவரையும் வெளியே போக சொல்லிவிட்டு, தோவலை மட்டும் அமரச் சொன்னாராம். இவருக்கும், தோவலுக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்துள்ளது. அந்த அறையில் இவர்கள் இருவரையும் தவிர, மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
இந்த ஒரு மணி நேர ரகசிய ஆலோசனை, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது,- ரஷ்யா போர் தொடுத்திருப்பதன் காரணமாக, இந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தடை செய்த பின்பும், இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. இதனால், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் உள்ளது. ஆனால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் விலை உயர்ந்துள்ளது.
![]() |
இதற்கிடையே, ‘உக்ரைன் – -ரஷ்யா இடையேயான போரை நிறுத்த இந்தியாவால் தான் முடியும்’ என அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில், புடின்- – தோவல் ரகசிய பேச்சு என்னவாக இருந்திருக்கும் என்பது புதிராக உள்ளது.
பிரதமர் மோடியிடமிருந்து ஏதாவது செய்தியை புடினுக்கு தோவல் சொல்லியிருப்பாரா? அல்லது புடின், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பியுள்ளாரா என உலக நாடுகளிடையே குழப்பம் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement