மதுக்கரை: கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சி மாச்சேகவுண்டன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் முன்னிலையில், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பிரகாஷ் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ,ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், திமுக ஊராட்சி செயலாளர் தேவராஜ், முன்னாள் துணைத்தலைவர் விஜயரங்கநாதன், அவைத்தலைவர் செல்வராஜ் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் சுரேஷ், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவ -மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.