அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசியலில் லேட்டஸ்ட் பரபரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். இருதரப்பும் வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டிய நிலையில் இரட்டை இலையை முடக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கடைசியில் பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டார். தேர்தல் ஆணையமும் இரட்டை இலையை முடக்கவில்லை. இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக மாறியுள்ளது. இந்நிலையில் எடப்பாடியின் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அவரது மகன் மிதுனின் தலையீடு இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என சவுக்கு சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மிதுன் பழனிசாமிசமயம் தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ஒரு சதவீதம் கூட மிதுனின் தலையீடு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நடவடிக்கைகளில் இல்லை. இது மற்ற தலைவர்களின் வாரிசுகளையும் சைலண்ட் மோடில் அடங்கி உட்கார வைக்க பெரிதும் உதவி வருகிறது. தற்போதைக்கு நேரடி அரசியலில் மிதுனை கொண்டு வரும் எண்ணமும் இல்லை. அதேசமயம் தொழில்நுட்ப ரீதியாக சிறிய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
ஜெ., பாலிடிக்ஸ்அதுமட்டுமின்றி அதிமுகவின் மூத்த தலைவர்களும் அப்படி ஒரு வாரிசு அரசியல் வேண்டாம் என்று இதுவரை நேரடியாகவே கூறி வருகிறார்களாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் அதிமுகவினர் அனைவரும் மிகவும் பணிந்து மட்டுமே சென்றிருக்கின்றனர். எதிர்த்து கேள்விகள் கேட்டது இல்லை. யாரையும் சரிக்கு சமமாக அவர்கள் நடத்தியதும் கிடையாது.
வாரிசு அரசியல்ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. கட்சி தற்போதுள்ள சூழலில் மூத்த தலைவர்களை சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கும் அளவிற்கு தான் வைத்துள்ளார். இதனால் எது வேண்டும்? எது வேண்டாம்? என்பது கட் அண்ட் ரைட்டாக எடப்பாடியிடம் கூறி விடுகின்றனர். எடப்பாடியின் வாரிசு உள்ளே வந்துவிட்டால் மற்றவர்களின் வாரிசுகளும் உள்ளே வந்துவிட அதிக வாய்ப்புள்ளது.
கள நிலவரம்இது அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் மிதுனின் ஆதிக்கம் எதுவும் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளிலும் சரி. அதிமுகவிலும் சரி. எதுவும் கிடையாது. இருப்பினும் இது தற்போதைய சூழல் தான். வருங்காலத்தில் எது வேண்டுமானாலும் மாறலாம். இதுதொடர்பான சில பின்னணி விஷயங்களை பிறகு சொல்கிறேன் என சவுக்கு சங்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி வருகைதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாரிசை அரசியலுக்கு கொண்டு வர மாட்டேன் என்று பேசியது பலருக்கும் நினைவிருக்கும். ஆனால் தற்போது கள நிலவரம் மாறி முதல்வர் நாற்காலி வரை உதயநிதி ஸ்டாலின் நெருங்கி வந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நல்ல வேளையாக அப்படியான நிலை அதிமுகவில் இல்லை என்று ஆறுதல் அடைந்து வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.