விஜய் சேதுபதிக்கு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் மகா காந்தியுடன் சண்டையிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.  2021ம் ஆண்டின் இறுதியில் விஜய் சேதுபதியின் இந்த சம்பவம் தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்தது, இந்த சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானத்தில் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி ஆகியோர் ஒன்றாக பயணித்தபோது இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த வாக்குவாதம் கடுமையாக மாறி பின்னர் பெரிய சண்டையாக மாறியது.  விமானத்திற்குள் நடைபெற்ற சண்டை விமானத்தை விட்டு இறங்கியதும் தொடர்ந்தது, இதனையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தரப்பினருடன் நடிகர் மகா காந்தி சண்டையிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி மிகப்பெரியளவில் பேசப்பட்டது.

அதன்பின்னர் நடிகர் மகா காந்தி, தன்னை விஜய் சேதுபதி கடுமையாக தாக்கிவிட்டதாகவும், அதற்காக இழப்பீடு வழங்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  இந்த விஷயத்தில் மகா காந்தியும், விஜய் சேதுபதியும் சமரசம் செய்ய விரும்பினால் பிரச்சினையை தீர்க்க ஏற்பாடு செய்வதாகவும், இருவரும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.  நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி ஆகியோர் சமரசமாகும் பொருட்டு மார்ச் 2-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இரு நடிகர்களுக்குள்ளும் நடந்த இந்த சண்டையை தொடர்ந்து, நடிகர் மக காந்தி தன்னை விஜய் சேதுபதி தாக்கியதாகக் கூறி, தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், விஜய் சேதுபதியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது.  மகா காந்தி மனு தாக்கல் செய்ததை  தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதியும் தாக்கல் செய்த பதில் மனுவில், லாப இழப்பீடு கோரிய மகா காந்தியின் மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.  இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி-மகா காந்தி தாக்கல் செய்த வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மனுவை விசாரிக்கும் பொழுது நடிகரான மனுதாரர் தெரிவித்த கருத்துகள் பொது வெளியில் கவனத்தை பெறுகின்றது என்றும் நடிகர் கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும் என்றும் பொறுப்புள்ள நபராக யாரையும் அவதூறாக பேசக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தி மார்ச் 2-ஆம் தேதி இரு தரப்பினரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இப்போது கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.