திருச்சி: துபாய், சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திய ரூபாய் 86.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு ஆண் பயணிகள் கடத்தி வந்த 1,516கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். உருளைவடிவில் 8தங்க கட்டிகள், கணையாழி வடிவில் 10 தங்க கட்டிகள், சங்கிலி வடிவில் 2 தங்க கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
