Dhanush: தனுஷை டீலில் விட்ட முன்னணி இயக்குனர்..வேறொரு நடிகருடன் கூட்டணி..ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

Thunivu: வினோத்தின் மீது கதை திருட்டு வழக்கு..இயக்குனர் பரபரப்பு புகார்..!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப்படம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாகும்.

கூலிங் கிளாசுடன் மாஸாக வந்த மோகன்லால்!
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜெ சூர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் தனுஷின் யாரடி நீ மோஹினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். ஏனென்றால் தனுஷின் ஆஸ்தான இயக்குனரான மித்ரன் ஜவஹர் தொடர் தோல்விகளில் இருந்த தனுஷிற்கு திருச்சிற்றம்பலம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தார்.

அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்த அப்படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இணைவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. சமூகத்தளங்களிலும் இவர்களின் கூட்டணி விரைவில் இணையப்போகின்றது என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் தற்போது தனுஷை விட்டுவிட்டு மித்ரன் மாதவனின் படத்தை இயக்கப்போகின்றார் என்ற செய்தி கேட்டவுடன் தனுஷின் ரசிகர்கள் சிலர் ஏமாற்றத்தில் இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.