Leonardo Dicaprio: 19 வயது பெண்ணை காதலிப்பதா?: 48 வயது டைட்டானிக் ஹீரோவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் லியோனார்டோ டிகேப்ரியோ. 48 வயதாகும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருக்கிறது. லியோனார்டோ டிகேப்ரியோ தற்போது 19 வயதான மாடல் அழகி ஈடன் பொலானியை காதலிப்பாக பேசப்படுகிறது.

கேப்ரியோவும், ஈடன் பொலானியும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசுகிறார்கள். உங்கள் வயது என்ன, அந்த பெண்ணின் வயது என்ன?. மகள் வயது பெண்ணை போய் காதலிக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். உங்களின் டைட்டானிக் படம் ரிலீஸானபோது ஈடன் பொலானி பிறக்கக் கூட இல்லை என சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

25 வயதுக்கு மேற்பட்ட யாரையும் காதலிக்க மாட்டார் லியோனார்டோ டிகேப்ரியோ என பெயர் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் தான் 19 வயது பெண்ணை காதலிக்கிறார் அவர்.

இந்நிலையில் கேப்ரியோ பற்றி நடிகை மிஷா பார்டன் கடந்த 2005ம் ஆண்டு கூறியது பற்றி பலரும் தற்போது பேசி வருகிறார்கள். 2005ம் ஆண்டு மிஷா பார்டன் கூறியதாவது, என் கெரியர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் லியோனார்டோ டிகேப்ரியாவுடன் படுக்கைக்கு செல்ல வேண்டும் என என் பப்ளிசிஸ்ட் கூறினார் என்றார்.

அப்பொழுது மிஷாவுக்கு வயது 19, லியோனார்டோ டிகேப்ரியோவுக்கு வயது 30 ஆகும். குழந்தை நட்சத்திரமாக வந்த மிஷா பார்டனுக்கு தற்போது 37 வயதாகிறது. 1999ம் ஆண்டு வெளியான நாட்டிங் ஹில், நைட் ஷியாமலனின் தி சிக்ஸ்த் சென்ஸ் ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மிஷா பார்டன்.

ஆல் மை சில்ட்ரன் உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார் அவர். The OC தொடரில் மரிஸா கூப்பராக நடித்ததன் மூலம் தான் மிஷா பார்டனுக்கு பெயரும், புகழும் கிடைத்தது. அந்த தொடரின் மூன்று சீசன்களில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷாவுக்கு 19 வயதானபோது மாடல் ஜிசல் பன்ட்சனை காதலித்து பிரிந்தார் லியோனார்டோ டிகேப்ரியா. அப்பொழுது தான் அவருடன் படுக்கைக்கு செல்லுமாறு பப்ளிசிஸ்ட் கிரெய்க் ஸ்னெய்டர் மிஷாவிடம் கூறியிருக்கிறார். ஒரு போட்டோஷூட்டில் கேப்ரியோவை பார்த்த கிரெய்க் மிஷாவிடம் அப்படி கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்ட மிஷாவோ, இது லியோ தானே, அவருக்கு 30 வயது இருக்குமே என கேட்டிருக்கிறார்.

லியோனார்டோ டிகேப்ரியோ கடந்த ஆண்டு 23 வயதான மாடல் ஜிஜி ஹதீதை காதலித்தார் என ஹாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இதற்கிடையே டிகேப்ரியோ பொலானியை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Vedaant Madhavan: நீச்சல் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மகன் வேதாந்த்: மாதவன் ஹேப்பி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.