Nayanthara: அதானே, நயன்தாராவாவது அஜித் மீதாவது: எல்லாமே பொய்யாம் கோப்ப்பால்!

Ak 62, Nayanthara:நயன்தாராவாவது அப்படி சொல்வதாவது என அஜித் குமாரின் ரசிகர்கள் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாராஅஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் கதை பிடிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். இது குறித்து அஜித்திடம் நயன்தாரா பேசியும் பலனில்லை என்று கூறப்பட்டது. தன் காதல் கணவரை கலங்க வைத்த அஜித்துடன் சேர்ந்து இனி நடிக்கவே கூடாது என நயன்தாரா முடிவு செய்துவிட்டார் என தகவல் வெளியானது.
ரசிகர்கள்ஒரு படத்தில் இருந்து இயக்குநர், ஹீரோ, ஹீரோயினை நீக்குவது எல்லாம் சாதாரண விஷயம். இது லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுக்கு தெரியாமல் இல்லை. அப்படி இருக்கும்போது அவர் போய் அஜித் மீது கோபத்தில் இருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லையே என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் அவர்கள் நினைத்தது சரி என்பது தெரிய வந்திருக்கிறது.

விக்னேஷ் சிவன்மனைவி மீது அதிக பாசம் வைத்திருப்பவர் விக்னேஷ் சிவன். மனைவிக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய மாட்டார். அப்படிப்பட்டவர் அஜித் குமாரின் சூப்பர் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார். அஜித் மீது நயன்தாரா கோபத்தில் இருந்திருந்தால் விக்னேஷ் சிவன் நிச்சயம் இப்படி செய்திருக்க மாட்டார். ஏனென்றால் அது நயன்தாராவை மேலும் கோபப்படுத்தும்.

​Vignesh Shivan:ஏ.கே. 62ல் இருந்து நீக்கப்பட்டும் விக்னேஷ் சிவன் செய்த காரியம்: அஜித் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்

கோபம் இல்லைவிக்னேஷ் சிவனே அஜித் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் என்றால் நயன்தாராவுக்கு தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மீது கோபம் எதுவும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ப்ரொஃபஷனலாக நடந்து கொள்ளும் நயன்தாரா, ஏ.கே. 62 விவகாரத்திற்காக எல்லாம் அஜித் மீது கோபப்படும் ஆள் இல்லை. அதனால் அந்த கோப மேட்டர் நிச்சயம் வதந்தியே என்கிறார்கள் ரசிகர்கள்.
ஆறுதல்நீங்கள் அஜித் சொன்னது போன்று மெதுவாக ஒரு கதையை தயார் செய்யுங்கள் அன்பான இயக்குநரே. அதன் பிறகு அஜித்திடம் கதை சொன்னால் நிச்சயம் உங்கள் படத்தில் நடிப்பார். உங்களுக்கு பிடித்த ஹீரோவை இயக்கிய சந்தோஷம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். அந்த நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது என ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்துள்ளனர்.

ஏ.கே. 62அஜித்தின் ஏ.கே. 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவிருக்கிறாராம். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்று நம்பப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, இது ஏ.கே. 62 மூட் தான் என்கிறார்கள். விக்னேஷ் சிவனை நீக்கியதும் அஜித் படத்தில் இருந்து அனிருத் விலகவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

​AK 62:ஏ.கே. 62 படத்தில் யார் இருக்கார்னு பாருங்க: அவரே கொடுத்த மாஸ் அப்டேட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.