இயக்குநருடன் பழனிக்கு வந்த சமந்தா… நிறைவேற்றிய நேற்றிக்கடன் என்ன தெரியுமா?

Samantha In Pazhani Temple: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பலத்த வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்பையும் பலரும் பாராட்டியிருந்தனர். 

முன்னதாக, தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரிய வகை நோய்களில் ஒன்றான இதில் இருந்து விரைவில் குணமடைவேன் என்றும் கடந்த அக். 29ஆம் தேதி சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். 

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வும், தசை வலியும் அதிகமிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைய சற்று காலமெடுக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ அவர்கள் சோர்வாகி அடிக்கடி மயக்கமிடவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த டிசம்பர் மாதம் அவர் தென்கொரியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக சென்று திரும்பியிருந்ததாக கூறப்பட்டது.

மேலும், சகுந்தலா பட நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலை அவர் கண்ணீர் வடித்தது பலரையும் கலங்கச்செய்திருந்தது. அந்த அளவிற்கு நோயின் தாக்கம் அவரை பாதித்திருந்தாலும், தொடர் உடற்பயிற்சி போன்றவற்றால் அவர் தனது மனத்திடத்தை அவர் வெளிக்காட்டி வருகிறார்.  

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தந்த நடிகை சமந்தா, படிப்பாதை வழியாக மலைக் கோவிலுக்கு சென்றார். அப்போது, 600 படிப்பாதைகளிலும் சூடம் ஏற்றி கொண்டு மேலே வந்து, ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு, பின்னர்  ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்த ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது, சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கபட்டதாகவும், தற்போது கடவுளின் அருளோடும்  மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பழனி கோவிலுக்கு வந்த சாமி தரிசனம் செய்த்தாகவும் தெரிவித்தார்.

Samantha

கோவில் நிர்வாகம் சார்பில்  பிரசாதங்கள் வழங்கபட்டது. அவருடன் 96 திரைப்பட இயக்குநர் சி.பிரேம்குமார் மற்றும் அவரின் உறவினர்கள் வந்திருந்தனர். சமந்தா, பிரேம்குமார் இயக்கத்தில், 96 தெலுங்கு ரீ-மேக்கில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.