கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியானது நல்ல மண்வளம் கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், பிங்க் உள்ளிட்ட 35 வகைக்கும் மேற்பட்ட ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தினத்தன்று கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் காதலர் தினத்திற்காக உற்ப்பதி செய்யப்பட்ட ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். தனர். கடந்த ஆண்டு லாக்டவுன் தளர்வுகளால் காதலர் தினத்தை குறிவைத்து விவாசயிகள் ரோஜா மலர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் மேற்கொண்டனர். ஆனால் 30% வரை உற்ப்பதி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு ரோஜா செடிகளை சரியான முறையில் பராமரித்து வந்தாலும் கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பெய்த மழையால் எதிர்ப்பார்த்த உற்பத்தியில் இருந்து ரோஜா மலர்கள் 40% குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பைட் – பால சிவபிரசாத், ரோஜா விவசாயி
இது ஒருபுறம் இருக்க தற்போது உள்ளூர் சுப நிகழ்ச்சிகளிலும் அதிகளவு ரோஜா மலர்களை தேவை அதிகரித்துள்ளதாகவும் ரோஜா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். காதலர் தினத்திற்காக சிவப்பு ரோஜாமலர் ஒன்று 20 ரூபாய்க்கும், மஞ்சள்,வெள்ளை உள்ளிட்ட நிற ரோஜாக்கள் 16 ரூபாய் வரையிலும் விற்பனையாவதால் லாபம் கிடைத்துள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர். உற்பத்தி குறைந்ததும் விலை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரோஜா மலர்களை அதிகளவு உற்பத்தி செய்ய உதவிட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.