கூடலூர்: தேனி மாவட்டம், வேப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. குமுளி (லோயர்கேம்ப்) காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க செல்லும்போது கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்ததும் ரகசிய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு நல்லதம்பியை சஸ்பெண்ட் செய்து எஸ்பி பிரவின் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏட்டு நல்லதம்பி அவரது தோட்டத்தில் வேலைசெய்யும் ஒருவருக்கு கஞ்சா கொடுத்துள்ளார். அவர் 250 கிராம் கஞ்சாவை 7 ஆயிரம் ரூபாய்க்கு வேறு ஒரு நபருக்கு விற்றுள்ளார். அதன் பேரில் இப்போது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
