கடலூரில் பெட்ரோல் ஊற்றி எரிப்பில் பலி 6 ஆக உயர்வு

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த தனலட்சுமி, சற்குரு என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து 9 மாத குழந்தை, தாய் செல்வி ஆகியோருடன் முதுநகரில் வசிக்கும் அக்கா தமிழரசி (29) வீட்டுக்கு சென்றார். அங்கு வந்த சற்குரு தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டார். அப்போது விறகு அடுப்பில் இருந்து தீ பற்றியதில் தமிழரசியும் 2 குழந்தைகளும் இறந்தனர். தனலட்சுமி, சற்குரு ஆகியோர் மருத்துவமனையில் இறந்தனர். செல்வியும் நேற்று உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.