திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் பாஸ்கர். இவர் சமீபத்தில் எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் உள்ளே எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார்.
பின்னர் சார்ஜை ஆப் செய்துவிட்டு வண்டியை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது திடீரென்று எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்துள்ளது. இதில் வீட்டின் உள்ளே இருந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி நந்தினி இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பாஸ்கர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாசலில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.