வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 35ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
![]() |
இன்று நடந்த மீட்பு பணியின் போது மேலும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிலர் கட்டட இடிபாடுகளில் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 35, 224 ஆயிரத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் துருக்கியில் 31,643 பேரும், சிரியாவில்3,581 பேரும் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் மீட்பு பணிகளும் நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement