நர்மதாபுரம், மத்திய பிரதேசத்தில் தேவாலயத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சுக்தாவா கிராமத்தில், கிறிஸ்துவர்களின் தேவாலயம் ஒன்று உள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், தேவாலயத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள் சிலர், இங்குள்ள மதநுால்கள், பொருட்கள் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர். நேற்று பிரார்த்தனைக்கு சென்றவர்கள், தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்டதை பார்த்து போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement