வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :ஜம்மு – காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வதற்கான கமிஷன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்ட சபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
![]() |
இதையடுத்து, ஜம்மு – காஷ்மீரில் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் தொகுதி மறுவரையறை கமிஷனை நியமித்து, 2020 ல் அரசாணை
வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் எஸ்.கே. கவுல், ஏ.எஸ். ஓகா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. கடந்த டிச., 1ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில், அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தொகுதி மறுவரையறை செய்வதற்கான கமிஷனை நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க முடியாது.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் உத்தரவு, அந்த வழக்குக்கு பொருந்தாது, கட்டுப்படுத்தாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement