பணஜி : ‘கோவாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள, 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த சப்தகோடேஷ்வர் கோவிலால், அங்கு சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும்’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
கோவாவின், நர்வே என்ற இடத்தில், 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த சப்தகோடேஷ்வர் கோவில் உள்ளது. மாமன்னர் சத்ரபதி சிவாஜியால், மூன்று நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், தொல்லியல் துறையினரால் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்ட இந்தக் கோவிலை, கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
கோவில் மீண்டும் திறக்கப்பட்டதற்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புனரமைக்கப்பட்டஸ்ரீ சப்தகோடேஷ்வர் கோவில், நம் நாட்டின் ஆன்மிக மரபுகளுடன் நம் இளைஞர்களின் தொடர்பை ஆழப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement