மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலம்: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்


மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

மும்பையில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 1.8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஆர்சிபி ஏலத்தைத் தொடங்கியபோது, ​​டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆர்சிபி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான கடுமையான ஏலப் போரில் இணைந்தது. டெல்லி அணி ரூ.1.10 கோடிக்கு ஏல தடையை உயர்த்திய நிலையில், இறுதியில் இந்திய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.80 கோடிக்கு ஏலத்த்தில் வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலம்: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் | Wpl Auction 2023 Captain Harmanpreet Kaur MiGetty Images

முதல் WPL போட்டி மும்பையில் மார்ச் 4 முதல் 26 வரை இரண்டு மும்பை மைதானங்களில் விளையாடப்படும் மற்றும் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று (பிப்ரவரி 13) மும்பையில் நடைபெற்றது.

இதனிடையே, தீப்தி ஷர்மா (Deepti Sharma) ரூ.2.6 கோடிக்கு UP வாரியர்ஸுக்குச் சென்றார், மேலும் அவுஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ரூ.3.2 கோடிக்கு எலாம் எடுக்கப்பட்டு, அதிக சம்பளம் வாங்கும் வெளிநாட்டு வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.