மைசூரு, ஈரான் மருத்துவ மாணவியின் பலாத்கார புகாரைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கணவர் அடில் துராணி மீது மைசூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகை ராக்கி சாவந்த், ஹிந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வாயிலாக மேலும் பிரபலம் அடைந்தார். இவர், அடில் துராணி என்பவரை 2022ல் திருமணம் செய்தார்.
இருவரும், மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த நிலையில், அடில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக, ராக்கி சாவந்த் சமீபத்தில் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அடில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், மருத்துவம் படிக்க வந்த மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த மாணவி, அடில் மீது நேற்று போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதில், அவர் கூறியுள்ளதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக, மைசூருவில் உள்ள வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். திருமணம் செய்வதாக உறுதி அளித்த அடில், பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
திருமணம் குறித்து கேட்டபோது, மறுத்த அவர், என் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான் மாணவியின் புகாரை அடுத்து, அடில் துராணி மீது, போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement