சேலம்: சேலம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவ தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை, தனது பெயருக்கு மாற்ற, உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பதிவுத்துறை அலுவலகத்தில் மனு செய்தார். இடத்தை பார்த்த தாதகாப்பட்டி பிரிவு சார் பதிவாளர் செல்வபாண்டியன் (52), பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறி, பத்திர எழுத்தர் கண்ணன் மூலமாக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின்படி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை அவர் கடந்த 6ம் தேதி கொடுத்தார். பத்திர எழுத்தர் கண்ணன் சார்பதிவாளர் செல்வபாண்டியனை போலீசார், கைது செய்தனர். இதையடுத்து செல்வபாண்டியனை சஸ்பெண்ட் செய்து சேலம் மண்டல பத்திரப்பதிவு டிஐஜி பிரபாகர் உத்தரவிட்டார்.
