லக்னோ: உத்தர பிரதேசம் சம்பல் மாவட்டம், லாராவன் கிராமத்தில் வேளாண் பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதாக அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், நேற்று முன்தினம் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றபோது அந்த ரயிலில் சுமார் 24 பசுக்களை தள்ளிவிட்டனர். இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. மற்ற பசுக்கள் படுகாயம் அடைந்தன. இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
பசுக்கள் உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.