மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், ‘இன்று முதல், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பானிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கோவிட் -19 பரிசோதனை கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.
சிவில் ஏவியேஷனின் ‘ஏர் சுவிதா’ தளத்தின் மூலம் கோவிட் பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்கவும், சுகாதார தகவல்களை வழங்கவும் தேவையில்லை. இருப்பினும், இந்தியாவுக்கு வரும் பயணிகளில் 13 சதவீதத்தினரின் ரேண்டம் பரிசோதனை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.